தூத்துக்குடி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்–4 தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்


தூத்துக்குடி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்–4 தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்–4 தேர்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்–4 தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்வை மாவட்டம் முழுவதும் 44 ஆயிரத்து 57 பேர் எழுதுகின்றனர். இதற்காக 144 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு உள்ளன.
இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. நேற்று இந்த வினாத்தாள்களை தாசில்தார்கள் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த தாலுகாக்களில் உள்ள சார்நிலை கருவூலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கண்காணிப்பு குழு
மேலும் தேர்வை கண்காணிக்க 15 பறக்கும் படைகள், 22 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுக்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தலைமையில் நேற்று நடத்தப்பட்டது. இதில் கண்காணிப்பு பணியை மேற்கொள்வது குறித்தும், வினாத்தாள்களை பாதுகாப்பான மையங்களுக்கும் கொண்டு செல்வது, விடைத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு செல்வது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

Comments

Popular posts from this blog

#PokemonGo: Augmented-Reality Mobile Game Available for Android and iOS Devices in Select Countries

Vardha Cyclone - Video